எல்லாம் கடவுள் செயல்
அவை எது எல்லாம் என்று பார்ப்போம்,
காலையில் எழும் பொழுது நல்ல சகுனம் வேண்டும் ,
அம்மா தரும் காப்பி கொஞ்சம் கசந்து இனிக்க வேண்டும் ,
எல்லாரும் சிரித்து பேச வேண்டும் ,
முகம் சுளிக்காமல் உதவி செய்ய வேண்டும் ,
படிப்பு நன்றாக ஏற வேண்டும் ,
பட்டம் பல என் பெயர் பின்னே எழுத வேண்டும் ,
பணம் பெட்டியில் நிறைய வேண்டும்
பட்டாடை தங்கம் ஜொலிக்க வேண்டும் ,
வேலை செய்ய தேவையில்லை
என்னும் முதலாளி மகனாய் நான் இருக்க வேண்டும் .
பெண் பார்க்க செல்லும் என்னை
கண் பார்த்து அவள் கலக்க வேண்டும் ,
ஆண் ஒன்று பெண் ஒன்று பெற்ற பின்னே
நான் ஆயிரத்தில் ஒருவனாய் சிறக்க வேண்டும் .
இப்படி நல் வாழ்வு வாழ
முன்னே நல்வினை செய்ய வேண்டும் ,
கலி காலமான இந்த யுகத்திலே
எண்ணும் எண்ணமெல்லாம் நல்லதாய் இருந்திட்டால்
ஒரு குறையில்லா வாழ்க்கை வாய்த்திடுமே !
இப்படி வந்த கோமகன் வாழ்க்கை
கடவுள் செயல் அல்ல கண்ணே
அது உன் மனதின் நல் எண்ணம் கொடுத்த
கருவில் உருவான காவியமே !

No comments:
Post a Comment